பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!

பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!









பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் 


குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. 

வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல்,


 கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு 


சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் 

இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, 


பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன 

குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் 


பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற 

சக்தியும் இதுக்கு இருக்கு.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். 


இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி 

உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை 

துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் 

கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற 


அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் 

செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், 

புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.



கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் 


அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த 

டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து 

சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் 


ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு 

மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் 

நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் 

பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மலச்சிக்கலை நீக்கும்.

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

முகப்பொலிவு கூடும்.

சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் 


விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை 


குணப்படுத்தும்.


பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு 


வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, 


ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.





பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் 


பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி 


வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் 


சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் 

அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், 


பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக 

சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் 

போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக 

உள்ளது.
Wednesday, 17 July 2013 - 0 comments

சமையல் குறிப்புகள்

1. சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.

2. ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.

3. காய்களை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

4. நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.

5. கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

6. கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.

7. முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும்.

8. பச்சரியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது.

9. காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும்.

10. பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.

11. வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

12. சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.

13. பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.

14. கிழங்குகளை மூடி பாத்திலத்தில் வேகவைக்க வேண்டும். காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.

15. சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மாவு கிடைக்கும்.
- 0 comments

பேச்சுலர் முட்டை ரெசிபி

தற்போது வேலைக்காக வெளியூர்களில் தங்கி வேலைப் பார்ப்போரின் 

எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆண்கள் தான் ஏராளம். எனவே 

அத்தகையவர்கள் விடுதிகளில் உணவுகள் சரியில்லை என்பதற்காக, 

நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி, தாமே சமைத்து சாப்பிடலாம் 

என்று முயற்சிப்பார்கள். அத்தகயை பேச்சுலர்களுக்கு ஒரு எளிமையான 

முட்டை ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி 

செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுக்கு சொல்லுங்கள். 

மேலும் இந்த முட்டை ரெசிபியை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக கூட

 சாப்பிடலாம். சரி, அந்த பேச்சுலர் முட்டை ரெசிபியைப் பார்ப்போமா!!!





தேவையான பொருட்கள்: 

 முட்டை - 5-6 (வேக வைத்தது) 

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 

புளி சாறு - 2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)


செய்முறை: 


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி 

வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

 பின்னர் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, 

தீயை குறைவில் வைத்து, 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும். 

 கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை இறக்கி, முட்டையை 

இரண்டாக வெட்டி வாணலியில் வைத்து, முட்டையின் மேல் அந்த கலவை 

நன்றாகப் படும்படி பிரட்டி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி 

பரிமாறினால், சூப்பரான பேச்சுலர் முட்டை ரெசிபி ரெடி!!!


ஆயில் புல்லிங் (Oil Pulling)



காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , 

(அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ)ஆலிவ் (அ) தேங்காய் 

எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 


மில்லி லிட்டர்) 

வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் 

இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க 

வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து 

கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று 

எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த 

தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் 

எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, 

வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.....

ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், 


பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் 

விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் 

நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், 

தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை,

 ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற 

நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.



நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், 


இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) 

எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான 

நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, 

வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை 

தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா 

நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை 


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் 

முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் 


குணமாக்கியும் இருக்கிறார்கள். தவறாமல் ஆயில் புல்லிங் 

எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற 

கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை

 என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் 



நோயின் தீவிரம் குறையும்.

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம் !!!

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம் !!!




அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. 


அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை 

தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய 

மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் 

இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து 


வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து 

கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக

 ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் 

படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு 

வரவேண்டும்.



இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். 


அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் 

வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு 

வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து 

ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.இளம்பெண்கள் 

உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.



ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி 


ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் 

தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் 


பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் 


தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.

3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் 


எடை குறையும்.

4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து 


சாப்பிட உடல் எடை குறையும்.



5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் 


விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 

டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் 

எடை குறையும்.


6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, 


கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு 

குறையும்.

7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் 


சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
- 0 comments

மட்டன் கப்ஸா

தேவையான பொருட்கள் :

மட்டன் - கால்கிலோ


பாசுமதி அரிசி - கால்கிலோ


வெங்காயம் - 100 கிராம்


தக்காளி - 100கிராம்


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்


மிளகாய்த்தூள் - கால் - அரைடீஸ்பூன்


கரம் மசாலா - கால் டீஸ்பூன்


முழுமிளகு - கால் டீஸ்பூன்


காய்ந்த எலுமிச்சை - 1

ஏலக்காய் - 2


கிராம்பு - 2


பட்டை - சிறிய துண்டு


பிரியாணி இலை-1


சாஃப்ரான் - 1 பின்ச்


நெய் - அல்லது பட்டர் - 50 கிராம்


உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்


உப்பு - தேவைக்கு.






செய்முறை 

மட்டனை முதலில் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி,  மட்டன் துண்டுகளுடன் சில்லி பவுடர்,தயிர்,உப்பு ஊற வைக்கவும்.அரிசியையும் 10 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம் நறுக்கியும்,தக்காளியை பேஸ்ட் செய்தும் வைக்கவும்.
குக்கரில் ஊறவைத்த மட்டன், இரண்டரை கப் தண்ணீர்,காய்ந்த லெமன்,மிளகு,ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை, தேவைக்கு உப்பு சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.

 கப்ஸா செய்யும் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 நறுக்கிய வெங்காய்ம் வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட், விரும்பினால் கால்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.ஏற்கனவே ஏல்ம்,பட்டை,கிராம்பு சேத்து கறியை வேகவைத்து இருக்கிறோம்.

 அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும். பிரட்டிவிட்டு நன்கு வதக்கவும்.


ஊறிய அரிசி சேர்க்கவும்.பக்குவமாக  மசாலா அரிசியில் சேரும் படி பிரட்டி விடவும்.

வேக வைத்த மட்டனை சூட்டுடனே மட்டனில் இருக்கும் தண்ணீருடன் ஊற்றவும்.வேகவைக்கவும்.அரிசி வெந்து மேல் வரும் பொழுது அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.பின்ச் சாஃப்ரான் சேர்க்கவும்.
மூடி  போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். மீண்டும் பத்து நிமிடம் கழித்து திறக்கவும் ,சோறு உடையாதவாறு பிரட்டி பரிமாறவும்.பரிமாறும் முன்பு காய்ந்த  எலுமிச்சையை எடுத்து விடவும்.
வறுத்த முந்திரி,திராட்சை தூவி அலங்கரித்து  பரிமாறவும்.

குறிப்பு:

மிளகாய்த்தூள் விரும்பினால் சேர்க்கலாம், கப்ஸா காரம் இல்லாமல் இருக்கும்.இது அரபு ஸ்டைல் பிரியாணி.
- 0 comments

காய்கறி கட்லெட்

தேவையான பொருட்கள்:


உருளை கிழங்கு: 1/4 கிலோ

ரஸ்க் - 6


பட்டாணி: 100 கிராம்


பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி


காரட்: 150 கிராம்


முருங்கை பீன்ஸ்: 50 கிராம்


பெரிய வெங்காயம்: 2


இஞ்சி:  சிறிய துண்டு


வற்றல் தூள்: 2 தேக்கரண்டி


பூண்டு: 8 பல்


மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது


கொஞ்சம் நெய்


பட்டை: 1


கிராம்பு: 6


உப்பு: தேவைக்கேற்ப


முந்தரி பருப்பு:  10


மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி






செய்முறை:



    உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.

   மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும்.

 எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.
- 1 comments

அவல் சப்பாத்தி

தேவையானவை:

சுத்தம் செய்யப்பட்ட அவல் = அரை கப்

புளித்த தயிர் = ஒரு கப்


கோதுமைமாவு = ஒரு கப்


மிளகுத்தூள் = ஒரு டீஸ்பூன்


சீரகத்தூள் = அரை டீஸ்பூன்


உப்பு = தேவைக் கேற்ப


எண்ணெய் அல்லது நெய் = தேவைக்கேற்ப.






செய்முறை:

 அவலுடன் ஒரு கப் தயிர், உப்பு சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு அக் கலவையுடன் உப்பு, கோதுமைமாவு, மிளகாய்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு சுட்டு எடுக்கவும். சைட்&டிஷ் ஆக ‘தால்’ ஏற்றது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

அவல் சப்பாத்தி: கோதுமை மாவுக்கு பதிலாக கேழ்வரகுமாவை சேர்த்து சப்பாத்தி செய்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இன்னும் மிருதுவாகவும் இருக்கும்.

- 0 comments

பருப்பு புளி மசியல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

பயத்தம் பருப்பு - 1/4 கப்


கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்


புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு


உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்


வெந்தயம் - 1/2 டீஸ்பூன்


காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை


பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை - சிறிது







செய்முறை:

புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.

 துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 

புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Tuesday, 16 July 2013 - 0 comments

சிக்கன் பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி – அரை கிலோ

சிக்கன் - அரை கிலோ


வெங்காயம் – கால் கிலோ


தக்காளி – கால் கிலோ


தயிர் - கால் டம்ளர்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி


கொத்தமல்லி - கால் கட்டு


புதினா - எட்டு இதழ்


பச்சை மிளகாய் - நான்கு 


மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி

எலுமிச்சை - பாதி பழம்


பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று


கிராம்பு - இரண்டு


ஏலம் - ஒன்று


எண்ணெய் - கால் டம்ளர்


நெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு






செய்முறை

முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.
- 2 comments

ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்

வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.

இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.

அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.

என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.

இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...