தற்போது வேலைக்காக வெளியூர்களில் தங்கி வேலைப் பார்ப்போரின்
எண்ணிக்கை
அதிகம். அதிலும் ஆண்கள் தான் ஏராளம். எனவே
அத்தகையவர்கள் விடுதிகளில்
உணவுகள் சரியில்லை என்பதற்காக,
நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி,
தாமே சமைத்து சாப்பிடலாம்
என்று முயற்சிப்பார்கள். அத்தகயை
பேச்சுலர்களுக்கு ஒரு எளிமையான
முட்டை ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து முயற்சி
செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுக்கு
சொல்லுங்கள்.
மேலும் இந்த முட்டை ரெசிபியை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக கூட
சாப்பிடலாம். சரி, அந்த பேச்சுலர் முட்டை ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5-6 (வேக வைத்தது)
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
வெங்காயத்தைப்
போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
கிளறி,
தீயை குறைவில் வைத்து, 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை இறக்கி, முட்டையை
இரண்டாக வெட்டி
வாணலியில் வைத்து, முட்டையின் மேல் அந்த கலவை
நன்றாகப் படும்படி பிரட்டி,
அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி
பரிமாறினால், சூப்பரான பேச்சுலர் முட்டை
ரெசிபி ரெடி!!!
0 comments:
Post a Comment